About the USI (Tamil)
What is a Unique Student Identifier (‘மாணவ-மாணவியர் பிரத்தியேக அடையாளக் குறியீடு’) (USI)? என்பது என்ன?
ஒரு ‘Unique Student Identifier (USI)’ என்பது ஆஸ்திரேலியாவில், தேசிய அளவில் அங்கீகரிக்கப்படும் பயிற்சியைப் பெற்றுவரும், அல்லது உயர் கல்வித் தகுதி ஒன்றிற்காகப் படித்துவரும் மாணவ-மாணவியருக்கான சுட்டு இலக்கமாகும்.
1 சனவரி 2015-இல் இருந்து பூர்த்தி செய்யப்பட்டுள்ள உங்களுடைய அனைத்து ‘Vocational Education and Training’ (‘தொழிற்கல்வி மற்றும் பயிற்சி’) (VET) பதிவுகளையும், முடிவுகளையும் உள்ளடக்கும் இணையவழிக் கணக்கு ஒன்றுடன் ஒரு USI உங்களைத் தொடர்புபடுத்தும்.
ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கும்போது அல்லது மேலதிகப் படிப்பு ஒன்றை மேற்கொள்ளும்போது உங்களுடைய புதிய வேலை வழங்குநருக்கு அல்லது பயிற்சிப் பாடசாலைக்கு உங்களுடைய VET பயிற்சிப் பதிவுகளையும் தேர்வு முடிவுகளையும் நீங்கள் கொடுக்கவேண்டியிருக்கலாம்.
ஒரு கணினி, ‘டேப்ளட்’ அல்லது மொபைல் தொலைபேசியின் மூலமாக நீங்கள் உங்களுடைய தேர்வு முடிவுகளையும், பதிவுகளையும் உங்களுடைய USI இணையவழிக் கணக்கிலிருந்து பெற இயலும்.
USI ஒன்று யாருக்குத் தேவைப்படும்?
1 சனவரி 2015-இற்குப் பிறகு படிக்கும் எவ்வொரு மாணவ-மாணவிக்கும் இது தேவைப்படும். பல்கலைக்கழகம், TAFE அல்லது தனியார் பயிற்சிப் பாடசாலை ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் படிப்புகள், தொழிற்பயிற்சிகள், சான்றிதழ் அல்லது டிப்ளோமா ஆகியவற்றிற்கான படிப்புகள் ஆகியவற்றை இது உள்ளடக்கும்.
USI ஒன்றை நீங்கள் ஏன் பெறவேண்டும்?
படித்துக்கொண்டிருக்கும் மாணவ-மாணவியர்கள் அவர்களுடைய பயிற்சியை முடிப்பதற்கு முன்பாக USI ஒன்றைப் பெற்றிருக்கவேண்டும் என்று சட்டம் வேண்டுகிறது.
USI ஒன்றை நான் எவ்வாறு பெறலாம்?
அடையாள ஆவணம் ஒன்று உங்களிடம் இருந்தால், மற்றும் உங்களால் ஆங்கிலம் வாசிக்க இயலும் என்றால், USI ஒன்றிற்காக நீங்கள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம். உங்களால் ஆங்கிலம் வாசிக்க இயலாது என்றால், நண்பர் அல்லது குடும்ப அங்கத்தவர் ஒருவரை உதவுமாறு நீங்கள் கேட்கலாம். USI ஒன்றிற்காக விண்ணப்பிக்க உங்களுடைய பாடசாலையினாலும் உங்களுக்கு உதவ இயலும்.
மொழிபெயர்ப்பாளர்
ஆங்கிலம் பேசுவதில் அல்லது விளங்கிக்கொள்வதில் சிரமம் உள்ளவர்கள் 131 450-இல் மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்த்துரைப்பு சேவை (TIS National)-ஐ அழைத்து உதவி பெறலாம். 1300 857 536 -இல் USI அலுவலக’த்தை அழைக்குமாறு TIS National -ஐக் கேளுங்கள். 160-இற்கும் மேற்பட்ட மொழிகள் மற்றும் கிளைமொழிகளில் மொழிபெயர்ப்பு TIS National சேவைகளை அளிக்கிறது.
நன்றி